முன்னாள் இராணுவ வீரர் உட்பட இருவர் அதிரடி கைது!
Sri Lanka Army
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
மெத்தம்பேட்டமைன்(ஐஸ்), ஹெரோயின், ரி-56 உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்படும் கைவிலங்குகளுடன் முன்னாள் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையை களுத்துறை பிரதேச போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் 28 மற்றும் 27 வயதுடையவர்கள் என்றும், களுத்துறை மற்றும் வஸ்கடுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது நடடிவக்கை
துணை காவல்துறை பொறுப்பதிகாரி பி.ஆர். வீரசேனவிற்கு கிடைத்த தகவலின் படி இந்த கைது நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது, 30 ரி-56 தோட்டாக்கள், கைவிலங்குகள், கிட்டத்தட்ட 6 கிராம் ஹெராயின் மற்றும் அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |