இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிய சர்வதேச வங்கி!
ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கூட்டுத்தாபனமான HSBC வங்கி இலங்கையில் தனது முழு வங்கி வணிகத்திலிருந்தும் வெளியேற தீர்மானித்துள்ளது.
அதன்படி தனது வணிகத்தை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு விற்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், HSBC வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர் கணக்குகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன்களில் சுமார் இஇரண்டு லட்சம் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
இலங்கை ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு
ஒரு பிணைப்பு ஒப்பந்தத்திற்கு உட்பட்ட இந்த பரிவர்த்தனை, ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, HSBC வங்கியின் அனைத்து இலங்கை ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (NTB) ஒப்புக்கொண்டுள்ளது.
சர்வதேச நிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கியின் உலகளாவிய வலையமைப்பின் முக்கியத்துவத்தை மேற்கோள்காட்டி, இலங்கை நிறுவனங்கள் மற்றும் நிறுவன வங்கி நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை HSBC உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்குள் மற்றும் வெளியே இருவழி வர்த்தகம் மற்றும் முதலீடுகளை செயல்படுத்துவதன் மூலம் HSBC வங்கி தொடர்ந்தும் பெருநிறுவன மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

