வங்கி கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படும் கொடுப்பனவு!
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு இன்று (15) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை நலன்பரி நன்மைகள் சபை இன்று(15) வெளியிட்டுள்ளது.
முதல் கட்டத்தின் கீழ், 1,012,812 பயனாளிக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ. 9,357,346,250 (ஏறக்குறைய ரூ. 9.36 பில்லியன்) வரவு வைக்கப்பட உள்ளது.
இரண்டாம் கட்டம்
இதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் இன்று ரூ. 2,468,250,000 (ஏறக்குறைய ரூ. 2.47 பில்லியன்) வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று மட்டும், ரூ. 2,468,250,000 (ஏறக்குறைய ரூ. 2.47 பில்லியன்) அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
இந்த நிலையில், இரண்டு கட்டங்களாக 1,224,459 குடும்பங்களுக்கு ரூ. 11,825,596,250 (ஏறக்குறைய ரூ. 11.83 பில்லியன்) கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |