கனேடிய மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அந்நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
லிபரல் கட்சித் தலைவரான ஐஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் கனடா நாட்டு பிரதமராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான இப்சோஸ், கனடா மக்களிடையே கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
மோசமான பிரதமர்
குறித்த கருத்து கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
இதன் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், கடந்த 50 ஆண்டுகளில் கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்று மக்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.