முன்னாள் ஜே.வி.பி நந்தன மரணத்தில் சுட்டு விரல்கள்!
கிரீன்லாந்தை பிடிக்கப்போவதான பிடிவாதம் மற்றும் பிடிமானத்துடன் வோசிங்டனில் இருந்து அமெரிக்க அரச தலைவர் ட்ரம்ப் நேற்று சூடாக சுவி்ட்சர்லாந்தின் டாவோஸ் மாநாட்டுக்கு கிளம்பியதாலேயோ என்னவோ அவரது சூடு அவர் பயணித்த ஏயார் போர்ஸ் வன் விமானத்தின் இயந்திரத்தையும் சற்று பற்றிப்பிடித்ததால் புறப்பட்ட வேகத்தில் மீண்டும் அவரது விமானம் அமெரிக்காவில் தரையிறங்கியது.
எனினும், மாற்று விமானத்தில் அவர் மீண்டும் சுவிசுக்கு புறப்பட்டதால் இன்று அவரது உரை எத்தனை மணிக்கு இடம்பெறும் என்பது தெரியாததால் ட்ரம்ப் ஏற்படுத்தும் குழப்பங்கள் போல இன்றைய டாவோஸ் நிகழ்சிநிரல் அட்டவணைகளும் இன்று காலை குழப்பத்தில் இருந்தன.
உலக அரங்கில் இவ்வாறு ட்ரம்ப் உருவாக்கும் சூடு இருக்க குளிர்கால ஐரோப்பாவுக்கு நிகரான வகையில் இலங்கையில் நுவரேலியா போன்ற இடங்களில் அசாதரணமான குளிர் பதிவாகிய நிலையில் அங்கும் மீண்டும் விச ஊசி மரணம் போன்ற சதிக்கோட்பாட்டு (Conspiracy theory )செய்திகள் தலையெடுத்துள்ளன.
ஜேவிபியின் முன்னைய முக்கிய தலையும் அதன் இப்போதைய முக்கிய பகையாளிகளில் ஒருவருமான நந்தன குணதிலக 18 ஆம் திகதி மரணமடைந்த நிலையில் அதில் திடீரென சதிக்கோட்பாட்டு சர்ச்சை வந்துள்ளதால் இன்று தகனம் செய்யப்படவிருந்த அவரது உடலம் எதிர்கால பரிசோதனைகளின் தேவையை கருத்தில் கொண்டு புதைக்கப்பட்டுள்ளது.
இப்போது நந்தன குணதிலகவின் மரணம் இயற்கை காரணங்களால் ஏற்பட்டதா? அல்லது அவர் வேண்டுமென்றே கொல்லபப்டடாரா? என்ற பரபரப்பு அரசியல் முகங்களால் கிசுகிசுக்கபடுகிறது.
தன்னை விஷம் வைத்துக்கொல்ல அல்லது வீதி விபத்து ஒன்றில் தான் பலியானதாக காட்டும் வகையில் திட்டங்கள் போடப்பட்டதான அவர் தனக்கு நெருக்கமாக சிலரிடம் குறிப்பிட்டதான தகவல்களும் வந்துள்ள நிலையில் உள்ளுர் மற்றும் உலகின் சூடான நிலவரங்களுடன் வருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |