முதிர்ச்சியற்ற அரசியல் தலைமையினால் நாட்டில் பயனில்லை : ஜே.வி.பி யை சாடும் ரணில் தரப்பு
European Union
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Volodymyr Zelenskyy
Ukraine
By Kathirpriya
நாட்டின் அதிகாரத்தினை சோதனை செய்யவே மக்கள் விடுதலை முன்னணி தன்னிடம் ஆட்சியைக் கோருவதாகவும், கோட்டாபய ராஜபக்சவை கொண்டு வந்து நல்ல பாடம் கற்பித்த மக்களுக்கு இனி பாடங்கள் தேவையில்லை எனவும் அதிபரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
முதிர்ச்சியற்ற அரசியல் தலைமையினால் நாட்டில் பயனில்லை எனத் தெரிவித்த ஆஷு மாரசிங்க, முதிர்ச்சியற்ற அரசியல்வாதிகளால் செயற்பட முடியாது என்பது இலங்கையிலும் உலகிலும் நிரூபணமாகியுள்ள விடயம் என்பதையும் தெரியப்படுத்தினார்.
விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து உக்ரைனில் அதிகாரத்தைக் கைப்பற்றியதாகவும் இன்று யுத்தம் காரணமாக அவர் அதிகாரத்தை இழந்து வருவதாகவும் இதன் ஆஷு மாரசிங்க சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 18 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்