சவுதியில் விழுந்து நொருங்கியது உலங்கு வானூர்தி : பயணித்த அனைவரும் பலி
சவுதி அரேபியாவில், உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான உலங்கு வானூர்தியே இன்று (28) விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயணித்த அனைவரும் பலி
உலங்கு வானூர்தியில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றுசவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த அனைவரும் சவுதி குடிமக்கள் என அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மேற்கு ஆசியாவில் நடந்த போரின் காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியை, அரம்கோ நிறுவனம் வெள்ளிக்கிழமை அன்று தனது ராஸ் தனுரா முனையத்தில் மீண்டும் தொடங்கியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்