அமெரிக்காவின் பெரிய விமானந்தாங்கியில் தீ! K.C 135 விமானமும் விழுந்தது!
உள்ளுர்அரசியல் அரங்கோ உலக அரங்கோ எவ்வளவு தான் பெரிய படைபல சக்தியாக இருந்தாலும் தன்னுடன் போரிடும் தரப்புக்களை குறைமதிப்புக்கு (அன்டர்-எஸ்ரிமேற்) உட்படுத்தும் தரப்புகள் போர்க்களத்தில் கடுமையாக அடிவாங்கும் நிலைமைகள் அவ்வப்போது நிருபிக்கப்படுகின்றன.
இது 1987 இலங்கையிலும் நடந்தது. விடுதலைப்புலிகளின் போராளிகள் சாறம்;கட்டிய ஆயுதம்தாங்கியுள்ள சின்னப்பெடியன்கள் என்பதால் அவர்களை சிலமணிநேரங்களில் அடக்கிவிடலாம் என நினைத்து இந்தியப்படையினர் ஆரம்பித்த ஒப்ரேசன் பவான் முதல் மணலாறு வரையான நடவடிக்கைகளுக்கும் பொருந்தும்.
அதேபோல அமெரிக்காவின் எப்பிக்பியூரி எனப்படும் ஈரான் மீதான காவியசீற்றத்துக்கும் பொருந்தும் என்பது மத்தியகிழக்கு மோதல்களில் தெரிகின்றது.
அதுபோல அரசியலில் நிரந்த நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை நிரந்த நலன்களே முக்கியம் என்ற நகர்வும் ரஸ்ய எண்;ணைக்கு தடைபோட்ட அமெரிக்காவே தற்போது படித்தவனே பாட்டை கெடுத்தான் எழுதியவனே ஏட்டை கிழித்தான் பாணியில் அந்த தடையை தற்காலிகமாக தளர்த்தியும் விட்டது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் முடக்குவதாக ஈரான் சபதம் செய்த நிலையில் எண்ணெய் விலைஉயர்வு நீடிக்கிறது ஆனால் டொனால்ட் ரம்ப்போ ஈரான் அணுஆயுதங்களை உருவாக்குவதை விட தற்போதைய மசகு எண்ணெயின் விலையேற்றம் ஒன்றும் பெரிதில்லை என நிற்கிறார்.
ஆனால் அதே ஈராக்கின் மேற்குப்பகுதியில் வானில் போர்விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் கே.சி 135 ஸ்ராற்ரோரேங்கர் விழுந்தது.
இதே சமகாலத்தில் அமெரிக்க கடற்படையின் புதிய மற்றும் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட்டில் தீப்பிடித்தது. உலகநெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையின் நெருக்கடியைத் சமாளிக்க இந்திய பெரியண்ணர் சாதகமாக பதிலளித்துள்ளதாக சிறிலங்கா கொஞ்சம் ஆறுதல்படும் நிலையில் இந்த விடயங்களை தழுவிவருகிறது செய்திவீச்சு….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |