மற்றுமொரு எம்.பிக்கும் தொற்றியது கொரோனா!
trinco
corona
sri lanka
people
By Shalini
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அதுகோரலவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கந்தளாய் பிரதேசத்தில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவருக்கு பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்