காபூல் குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி -உரிமை கோரியது IS-K
attack
kabul
death increased
By Sumithiran
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தா்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. என அந்த நாட்டின் சுகாதார அதிகாரி ஒருவர் தனது பெயரை வெளியிடாது பி பி சியிடம் தெரிவித்துள்ளார்.
அதிகரித்த இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இதே போன்ற எண்ணிக்கை வேறு பல செய்தி நிறுவனங்களால் தெரிவிக்கப்படுவதாக பி பி சி தெரிவித்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆப்கான் பொதுமக்கள். 13 அமெரிக்க இராணுவத்தினர், இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் மற்றும் பிரிட்டிஷ் நாட்டவரின் குழந்தையும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அரசு குழுவின் உள்ளூர் கிளையான IS-K இந்த தாக்குதலை நடத்தியதாக உரிமை கோரியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி