துப்பாக்கி சூட்டு சத்தங்களால் அதிரும் காபூல் விமான நிலையம் - பதற்றம் அதிகரிப்பு
fire
afghanistan
kabul
tension
By Sumithiran
காபூல் விமான நிலைய நுழைவாயில் அருகே துப்பாக்கிகளால் சுடப்படும் சத்தம் தொடர்ந்து கேட்டு வருவதால் அங்கு கடும் பதற்றம் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையத்திற்கு வெளியே திரண்டவர்களை அப்புறப்படுத்த தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக ஒரு தரப்பினரும், விமான நிலையத்திற்குள் உள்ள வெளிநாட்டு படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மற்றொரு தரப்பினரும் தெரிவித்தனர்.
காபூலில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றையதினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 170 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டமை தெரிந்ததே.
1ம் ஆண்டு நினைவஞ்சலி