கச்சதீவில் புதிதாக தோன்றிய புத்தர் - உண்மை நிலவரம் என்ன..! (காணொளி)
கச்சதீவில் மர்மமான முறையில் சிறிலங்கா கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்த மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
கச்சதீவு இலங்கை - இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பெளத்த மயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய - இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் சிறிலங்கா படையினர் கச்சதீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.
இதன் உண்மை நிலவரம் என்ன?
கச்சதீவு யாத்திரை தள பரிபாலகர் அருட்பணி விமலசேகரன்(வசந்தன் பாதர்) கையறு நிலையை இவ்வாறு பதிவுசெய்துள்ளார்.
கச்சதீவையும் விட்டு வைக்காத பௌத்தமயமாக்கல் - இந்தியாவை சீண்டிப்பார்க்க எத்தனிக்கிறதா சிறிலங்கா!
கச்சதீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம் பெற்றது - உடனடியாக அகற்றுங்கள்!