கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக அறிவித்த தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் வெளியிட்ட செய்தி குறிப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு திருவிழா இரத்து
விசைப்படகு கடற்றொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பயணிகளை அழைத்துச் செல்ல முடியாததால் கச்சத்தீவு திருவிழா இரத்து செய்யப்படுவதாகவும், இந்த விழாவில் இந்திய பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக கடற்தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்ற தீர்ப்பளித்ததை கண்டித்து நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக இரத்து செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |