கடவுள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்
இறைவனை கனவில் காண்பது என்பது அனைவருக்கும் நடந்து விடுவது கிடையாது.
மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற இறைவன் தரிசனம் கனவில் கிடைக்கும். இறைவனை கனவில் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
ஆகவே, இறைவன் நம்முடைய கனவில் வந்தால் அதற்கு அர்த்தம், அதனால் நமக்கு கிடைக்க போகும் பலன் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தெய்வத்தின் அருள் மற்றும் பாதுகாப்பு
1. இறைவன் கனவில் வந்தால் அந்த தெய்வத்தின் அருள் மற்றும் பாதுகாப்பு உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது என்று அர்த்தம். அதாவது இறைவன் உங்களின் பிரார்த்தனைகளை கேட்டு, உங்களுக்கு ஆசி வழங்குகிறார் என்று பொருள்.
2. இறைவன் உங்களின் வாழ்க்கையை ஆன்மிக ரீதியாக மாற்ற நினைக்கிறார் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் முக்கியமான மாற்றம் ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.
3. நீங்கள் ஏதாவது பிரச்சனையை சந்தித்து கொண்டிருக்கிறீர்கள் அல்லது ஏதாவது சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்றால், அந்த சமயத்தில் இறைவன் கனவில் வந்தால், “நீ தனியாக இல்லை உனக்கு துணையாக நான் இருக்கிறேன்” என இறைவன் கூறுவதாக அர்த்தம். அதோடு எப்படிப்பட்ட பிரச்சனை, தடையாக இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவதற்கான பலத்தை இறைவன் உங்களுக்கு கொடுப்பார் என்று அர்த்தம்.
ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பலன்
தெய்வீக கனவுகள் அனைத்துமே ஏதோ ஒரு முக்கியமான தகவலை உங்களுக்கு வழங்குகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையின் நோக்கம், முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க, உங்கள் வாழ்க்கை பாதையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்ற உங்களுக்கு ஊக்கப்படுவதற்காக கூட இது போன்ற கனவுகள் வரலாம்.
இறைவனின் உருவங்களை கனவில் கண்டாலும் ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. சிவ பெருமானை கனவில் கண்டால் உங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். பெருமாளை கனவில் கண்டால் நிலையான செல்வம் கிடைக்கும். மகாலட்சுமியை கனவில் கண்டால் அதிக அளவில் செல்வம் குவிய போகிறது என்று அர்த்தம்.
இறைவனிடம் பேசுவது போல் கனவு கண்டால் அது தெய்வீக வழிகாட்டுதலை குறிப்பதாகும். கனவில் கேட்ட வார்த்தைகள் உங்களுக்கு நினைவிற்கு வருகிறது என்றால் அது மிக முக்கியமான, உங்கள் வாழ்க்கையை மாற்றும் தகவலாக இருக்கலாம். இறைவன் உங்களுடன் பேச விரும்புகிறார் என்றும் அர்த்தம். இது போன்ற கனவு வந்தால், அந்த வழிகாட்டுதல்களின் படி நீங்கள் நடக்க துவங்கலாம்.
கோவில் கனவு கண்டால்
கோவில் பிரசாதத்தை வாங்குவது போலவும், ஆசீர்வாதம் வாங்குவது போலவும் கனவு கண்டால் விரைவில் நல்ல செய்தி, கடந்த கால நல்ல கர்மாக்களின் வழியாக பரிசுகள் கிடைக்கும்.
அல்லது சில துன்பங்களில் இருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள் என்றும் அர்த்தம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
