லொறி - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்:ஒருவர் உயிரிழப்பு
Accident
Death
kaduwela
By Sindu
கடுவெல, கொல்லுப்பிட்டிய வீதியில், கொஸ்வத்த சந்திக்கருகில் நேற்று (11) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளொன்று எதிர்த் திசையில் வந்த லொறியுடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லொறியின் சாரதி கைது
விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை - மில்லேவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபராவார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்