நோபல் அமைதிப் பரிசு பெற்றார் நவி பிள்ளை: பிரித்தானியத் தமிழர் பேரவை வாழ்த்து
சர்வதேச நீதி மற்றும் மனித உரிமைகளுக்காகப் பங்காற்றிய ஐ.நா மனித உரிமைகள் பிரிவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நீதிபதி நவி பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உயரிய அங்கீகாரத்திற்குப் பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் சர்வதேச நீதி கோரித் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தவர் நவி பிள்ளை.
உரிமை மீறல்கள்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா வழி சர்வதேச விசாரணை அமைப்பை (OISL) நிறுவுவதில் இவர் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்காற்றினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கிடைக்க இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி தமிழ் சமூகம் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

