காவல்துறையினர் மீது கடும் தாக்குதல்
கஹட்டகஸ்திகிலிய குருக்குரகம பிரதேசத்தில் நேற்றையதினம் (06) போதைப்பொருள் சோதனை நடவடிக்கையின்போது காவல்துறை அதிகாரிகள் குழுமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அனுராதபுரம் பிரதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 27 கிராம் ஹெரோயினுடன் 18 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த குழுவொன்று காவல்துறை அதிகாரிகளை தாக்கி சந்தேக நபரை விடுவிக்க முயற்சித்துள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான காவல் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை உத்தியோகத்தர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் 6 பெண்கள் உட்பட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.