முதுகெலும்பு இல்லாத அரசு: முடிந்தால் செய்யுங்கள் - கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி

Sri Lanka Police Tamils Gajendrakumar Ponnambalam
By Independent Writer May 24, 2025 02:29 AM GMT
Report

இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொள்ள இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajenthirakumar ponnambalam ) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசின் நிலைப்பாடு கேலிக்கூத்தானது. நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.

யுத்தம் தின்ற மண்ணை இந்தியாவிற்கு விற்கும் அநுர அரசு

யுத்தம் தின்ற மண்ணை இந்தியாவிற்கு விற்கும் அநுர அரசு

கடும் சட்ட நடவடிக்கை

அவர் மேலும் உரையாற்றுகையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய நேர்காணலின் போது இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாகக் கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தைக் கூறியுள்ளார். இதனை நானும் அவதானித்தேன்.

முதுகெலும்பு இல்லாத அரசு: முடிந்தால் செய்யுங்கள் - கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி | Kajenthirakumar Ponnambalam Speech In Parliament

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடனடியாக மீளப் பெற வேண்டும்.

இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு மேற்பட்ட கருத்து. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசின் நகைப்புக்கிடமான கேலிக்கூத்தான மனநிலையை இந்தக் கூற்று வெளிப்படுத்துகின்றது.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் என்பவர் சர்வதேசத்துக்குப் பதில் சொல்லக் கூடியவர். ஆகவே, அவர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்திருக்க கூடாது.

அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை

இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்க்கொள்ள இலங்கைக்கு முதுகெலும்பு இல்லை. அதனால் தான் இவ்வாறான பிழையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இனப்படுகொலை என்பது ஒரு குற்றம்.  இலங்கை ரோம உடன்படிக்கைக்கு உடன்பட வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது. அது ஒரு மிகப்பெரிய குற்றம். ஆனால் இனப்படுகொலை என்று கூறினால் சட்ட நடவடிக்கை என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது.

முதுகெலும்பு இல்லாத அரசு: முடிந்தால் செய்யுங்கள் - கடுமையாக சாடிய கஜேந்திரகுமார் எம்.பி | Kajenthirakumar Ponnambalam Speech In Parliament

முந்தைய ஆட்சியாளர்களைக் காட்டிலும் நாம் மாறுபட்டவர்கள் எனக் கூறும் தற்போதைய ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. இனப்படுகொலை தொடர்பில் வழக்குகள் நடக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களினால் வழக்குகள் சுயாதீனமாக தாக்கல் செய்யப்பட வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாகக் கூறுபவர்களுக்கு எதிராகக் கடும்சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட கருத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இந்தக் கருத்து அவர் பதவி வகிக்கும் அமைச்சுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது. அது தொடர்பில் உங்களால் ஏன் நீதியை நிலைநாட்ட முடியவில்லை?

உங்களிடமும் ஒரு குற்ற உணர்வு இருப்பதனால் தான் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 


அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அநுர அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021