ஏவல் நாயாக செயற்பட்டவர் படுகொலை! நடுநடுங்கி போயிருக்கும் ராஜபக்சர்கள்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலக குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் மூலம் தினந்தினம் ஓர் குற்றச்செயல் தொடர்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், மேற்கூறப்பட்ட குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணிய முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றியவரும் மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டார்.
இதனைதொடர்ந்து, குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல்வேறு குற்றச்செயல்கள் குறித்த தகவல்கள் வெளியாகியதோடு, ஒரு காலத்தில் ராஜபகசர்களின் ஏவல் நாயாக செயற்பட்டதாக கூறப்படும் கஜ்ஜா என்பவரின் கொலை தொடர்பான தகவலும் வெளியாகியது.
கஜ்ஜா என்பவர் ராஜபக்சர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தவர் என்றாலும் யூரியூப் சனல் ஒன்றின் இரண்டு நேர்காணல்களில் ராஜபக்சர்கள் செய்த குற்றங்களுக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தெரிவித்து அவற்றை எங்கு வேண்டுமானாலும் வாக்குமூலமாக வழங்குவேன் எனவும் அறிவித்திருந்தார்.
அதன்பின்னர் சிறிது காலம் கழித்து அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மித்தெனிய பகுதியில் வைத்து மர்மமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த படுகொலைக்கு ராஜபக்சர்கள் தான் காரணமாக இருக்கலாம் என தென்னிலங்கையில் சந்தேகங்கள் வலுத்துள்ளளன.
குறித்த விவகாரம் தொடர்பில் அநுர தலைமையிலான அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிற நிலையில், தற்போது ராஜபக்சர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
