தெரியாமேலேயே ஞானசார தேரரின் செயலணியில் இணைக்கப்பட்டோம்! முஸ்லிம் உறுப்பினர் வெளியிட்ட தகவல்
கலகொட அத்தே ஞானசார தேரர் (Kalagoda Aththe Gnanasara Thera) தலைமையிலான செயலணியில் இருந்து என்னை விலகுமாறு கோருவது யதாா்த்த அரசியலுக்கு அப்பாற்பட்டது என கொழும்பு மாநரகசபையின் உறுப்பினரும் ஞானசார தேரர் தலைமையிலான அரச தலைவர் செயலணியின் உறுப்பினருமான கலீல் உல் ரஹ்மான் (Khalil ul Rahman) தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் அங்கம் வகிப்பது தொடர்பில் எமது ஊடகம் வினவிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நானும், அரசியல் செயல்பாட்டாளா், ஹசீஸ் நிஸார்தீனும்(Hussein Nisardin), அரச தலைவர் செயலணி ஒன்றுக்கு பாிந்துரைக்கப்பட்டமை எமக்கு தொிந்திருந்தது. எனினும் ஞானசார தேரரின் தலைமையிலான செயலணிக்காகவே நாம் உள்வாங்கப்பட்டமை குறித்து முன்னர் எமக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,