மோதலில் முடிந்த மாணவர்களின் விளையாட்டு! ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்
Kalutara
Sri Lanka Police Investigation
By Vanan
களுத்துறையில் உள்ள இரு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் முடிவில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மக்கொன சர்ரே மைதானத்தில் நேற்று (01) இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் முடிவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விசேட சத்திரசிகிச்சை
கிரிக்கெட் மட்டையால் தலையில் தாக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட மாணவன் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தலையில் விசேட சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோதல் மற்றும் மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பில் பயாகல காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி