களுத்துறை மாணவி பணத்திற்கு விற்கப்பட்டாரா ; காவல்துறை வெளியிட்ட சந்தேகம்!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Death Sonnalum Kuttram Kalutara Incident
By Pakirathan May 13, 2023 06:15 AM GMT
Report

களுத்துறையில் உள்ள ஹோட்டல் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயதுடைய மாணவி உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மரணம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொள்ளுகின்ற விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள பிரதான சந்தேகநபருக்கு பணத்திற்காக குறித்த மாணவி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறையின் சந்தேகம்

களுத்துறை மாணவி பணத்திற்கு விற்கப்பட்டாரா ; காவல்துறை வெளியிட்ட சந்தேகம்! | Kalutara School Girl Death Exciting Information

உயிரிழந்த மாணவியுடன் விடுதிக்கு ஒன்றாக சென்ற அவரது நண்பியின் காதலன் குறித்த மாணவியை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு 20,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஆலோசனை வழங்கியுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதனடிப்படையில், பிரதான சந்தேக நபர் பணத்தின் ஒரு பகுதியை உயிரிழந்த மாணவியின் நண்பியினுடைய காதலனுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை, மாணவியின் மரணம் தற்கொலையா? கொலையா? என இன்னும் உறுதியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவிக்கு கடைசியாக தொலைபேசி அழைப்பு செய்தது யார் என்பதை இதுவரை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.

கைதான பிரதான சந்தேக நபர் இருதய நோயாளி எனவும், சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பை வழங்குமாறும் பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, மாணவியின் கால் மற்றும் மார்பகத்தில் பற்களின் அடையாளங்கள் காணப்படுவதாகவும், இதனால் சந்தேக நபரை சட்ட வைத்தியர் ஒருவரை பார்வையிட அனுமதிக்குமாறும் காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்பின்னர், சந்தேகநபர் மே 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேசமயம், உயிரிழந்த மாணவியின் குடும்ப உறுப்பினர்களிடமும் அவருடன் சென்ற 19 வயதுடைய அவரது நண்பியிடமும் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பிரதான சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மேற்கொண்டுவரும் தீவிர விசாரணைகளில் இன்னும் பல உண்மைகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகின்றது.


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020