தேசிய இணையப் பாதுகாப்புச் சட்டம் விரைவில் : கனக ஹேரத்
இலங்கையில் தேசிய இணையப் பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆணையம் நிறுவப்படும் என்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற “நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை” என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
உச்சிமாநாடு
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஜூலை மாத இறுதிக்குள் இலங்கையில் நடைபெற உள்ள டிஜிட்டல் பொருளாதார உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த உச்சிமாநாடு டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் புதுமை, ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டை வளர்ப்பதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டை மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் வளமான டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச்செல்லலாம் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |