மக்களை ஏமாற்றும் கஞ்சன தனது கணித அறிவை சரிபார்க்கவேண்டும் - சம்பிக்க கிண்டல்
இலங்கை மின்சார சபை இலாபம் அடையவில்லை என தெரிவித்து மக்களை ஏமாற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முதலில் தனது கணித அறிவை சரிபார்க்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
பொய்யான மற்றும் தவறான கருத்து
But in August CEB used a similar amount of hydro (633.9 Gwh) and still lost LKR 9 billion with partially implemented tariff hike!
— Patali Champika Ranawaka (@pcranawaka) January 4, 2023
Mr. Minister, do your math properly before making such false and misleading statements. pic.twitter.com/digjMMuX8o
கடந்த ஓகஸ்ட்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரகட்டண திருத்தத்தின் பின்னர் இலங்கை மின்சார சபை இலாபம் அடையவில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மக்களை ஏமாற்றுகிறார்.
பொய்யான மற்றும் தவறான கருத்துக்களை வெளியிடுவதற்கு அமைச்சர் தனது கணித அறிவை சரிபார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சர் கஞ்சனவினால் செவ்வாய்க்கிழமை (03) வெளியிடப்பட்ட செலவின பிரதிபலிப்பு மின்சார விலை சூத்திரத்துக்கான உத்தேச கட்டண கட்டமைப்பின் விவரங்களை மேற்கோள்காட்டியே சம்பிக்க எம்.பி, ல் மேற்குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
