தமிழகத்தை உலுக்கிய இரு குழந்தைகளின் படுகொலை வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இந்தியாவை (India) உலுக்கிய இரு குழந்தைகளின் கொலை வழக்கில் சிக்கிய இருவருக்கு இறுதி தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, காஞ்சிபுரம் (Kanchipuram) திருமணத்தை மீறிய உறவுக்காக இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கில் தாய் அபிராமி மற்றும் காதலன் சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்க்கப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தூக்க மாத்திரை
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் மற்றும் இவரது மனைவி அபிராமி இருவருக்கும் அஜய் (ஆறு வயது) என்ற மகனும், கார்னிகா (நான்கு வயது) என்ற மகளும் இருந்தனர்.
இந்தநிலையில், அபிராமி மற்றும் அதே பகுதியில் உள்ள சுந்தரம் என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர்.
இதற்காக இடையூறாக இருந்ததாக தெரிவித்து இருசவரும் மகன் மற்றும் மகளை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து, அபிராமி மற்றும் சுந்தரம் ஆகியோரை குன்றத்துார் காவல்துறையினர் கைது செய்தனர்.
வழக்கின் விசாரணை
இந்த வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா முன்னிலையாகியுள்ளார்.
விசாரணை முடிந்து, இவ்வழக்கில் இன்று (ஜூலை 24) நீதிபதி தீர்ப்பு வழங்கி வழக்கில், தாய் அபிராமி மற்றும் சுந்தரம் குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார்.
இதையடுத்து, தாய் அபிராமி மற்றும் சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டடுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
