கிழக்கு ஆளுநர் “தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்” - பிரபல தொழிலதிபர் புகழாரம்
கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என பிரபல தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கான காணிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக காணிகள் துப்பரவு பணிகள் இடம்பெறும் களத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர், தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா உளிளட்டவர்கள் சென்றுள்ளனர்.
இதன்போது உரையாற்றுகையிலே தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்ற சில நாட்களிலே பெருமளவில் மாற்றங்களை செய்துள்ளார். இவர் தமிழினத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் கூறவேண்டும்.
ஏனெனில் ஒரு இனத்தின் வலியை அந்த இனத்தை சேர்ந்தவரால் புரிந்துக்கொள்ள முடியும்.
குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் ஆளுநரிடம் தமது தேவைகளை நேரடியாக சென்று தெரிவித்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.