கண்டி - கொழும்பு வீதியை மறித்து இன்றிரவு போராட்டம் (படங்கள்)
colombo
people
protest
kandy
fuel
By Sumithiran
கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக வரிசையில் நின்ற பெருமளவான மக்கள் இன்று இரவு 7.30 மணியளவில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வாகனங்களை மறித்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
எரிபொருளை ஒழிப்போம், கோட்டாவை விரட்டியடிப்போம் என பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்தின் பின்னர், பெம்முல்ல, கம்பஹா, வீரகுல, யக்கல மற்றும் நிட்டம்புவ காவல் நிலையங்களில் இருந்து காவல்துறையினர் பிரசன்னமாகியிருந்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
சாலையின் இருபுறமும் நீண்ட வரிசைகள் காணப்பட்டதுடன், எஞ்சியிருந்த சிறிய இடைவெளியில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.





மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி