ஈழப் போராட்ட வலிகளை சுமந்து வரும் தமிழ் கலைஞர்களின் படைப்பு...!
முற்றுமுழுதாக இலங்கைக் கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட கண்ணம்மா திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் இடம்பெறவுள்ளது.
இத்திரைப்படம் நாளை மறுநாள் சனிக்கிழமை (24-01-2026) மாலை 5 மணிக்குத் திரையிடப்படவுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (23-01-2026) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழு இத்தகவலைத் தெரிவித்தது.
ஈழப்போராட்டம்
ஈழப்போராட்டத்தின் பாதிப்பையும் வலிகளையும் வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்குப் பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனப் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.
2J மூவீஸ் தயாரிப்பில், ஜூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்குப் பிரசாந் கிருஷ்ண பிள்ளை இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படத்தொகுப்பைச் சிவநேசன் மேற்கொண்டுள்ளார்.
மூத்த கலைஞர்களான ராஜா மகேந்திரசிங்கம், ஜூட் கொலின்ஸ், சபேசன் சண்முகநாதன், கேப்டன் பாஸ்கரன், சுவிஸ் ரகு, ஜாஸ்மின் (பவுண் அக்கா) மற்றும் ஜீவேஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் பல இளம் கலைஞர்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |