சோபகிருது ஆண்டின் கந்தசஷ்டி உற்சவம் காணும் நல்லூரான்
கலியுக வரதனான கந்தனை மனதார வேண்டி எண்ணிய காரியம் சித்தியெய்த நோற்கும் விரதம் கந்தசஷ்டி விரதமாகும், இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதம் ஒவ்வொரு முருகன் ஆலயத்திலும் சிறப்பு பூஜைகளுடன் இடம்பெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு (2023) அதாவது சோபகிருது வருடத்திற்கான கந்தஷஷ்டி விரதமானது நாளைய தினம் (14) ஆரம்பமாகி எதிர்வரும் சனிக்கிழமை (18) நிறைவடைகிறது.
கந்தஷஷ்டி உற்சவம்
இலங்கை நாட்டில் பரவி வாழும் இந்துக்கள் மாத்திரமல்லாது புலம்பெயர் தேசத்தில் வாழும் இந்துக்களாலும் துதிக்கப்பட்டு பூஜிக்கப்படும் நல்லூர் பதியுரை எம்பெருமான் முருகனும் இந்த 5 நாட்களும் உற்சவக்கோலம் காணவுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலே நாளை ஆரம்பமாகும் கந்தஷஷ்டி உற்சவம் ஆறு காலப்பூஜைகளுடன் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
சூரசம்ஹார உற்சவம்
எதிர்வரும் சனிக்கிழமை (18) இறுதி நாளன்று சூரசம்ஹார உற்சவம் இடம்பெற்று, மறுநாள் (19) எம்பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்று கந்தசஷ்டி உற்சவம் இனிதே நிறைவு காணவுள்ளது.
எண்ணிய காரியத்தினை சித்தியடைய வைக்கும் எம்பெருமான் நல்லூரானை இந்த கந்தசஷ்டி காலத்தில் வணங்கி சகல இன்பமும் பெற்றிடுவோம்.