நல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்(படங்கள்)
Nallur Kailasanathar Kovil
Hinduism
By Vanan
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்று மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று, வள்ளி, தேவசேனா சமேதராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நல்லூர் முருகப் பெருமான் வெளிவீதியுலா வந்தமை சிறப்பாக நடைபெற்றது.
படங்கள்



