துரோகத்தின் இரு துருவங்கள் கூட்டுச்சேர்ந்தார்களா..

Sri Lankan political crisis Eastern Province Northern Province of Sri Lanka Sonnalum Kuttram
By Independent Writer Aug 22, 2023 08:51 AM GMT
Report

தனியார் முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பில் பேசிக்கொள்ள அந்த இரண்டுபேர் சந்தித்துக்கொண்டார்களாம்.

இவர்கள் இணைந்து இலங்கையின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த வேறு போறார்களாம்.   

இது என்னவோ கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய் தான் கிடக்கிறது.   

உலகத் தமிழர்கள் தமிழின துரோகிகளாக விழிக்கும் பட்டியலில் மிக முக்கியமான இருவர் ஆனால் என்ன வித்தியாசம் என்றால் ஒருவர் வடக்கு துரோகி இன்னொருவர் கிழக்கு துரோகி மற்றபடி இருவரும் அற்ப சலுகளைகளுக்காக சிங்கள அரச கைக்கூலிகளாக தம்மை நிரூபித்துக்கொண்டவர்கள் தான்.   

சிங்களம் காலால் இட்ட விடயங்களை தங்கள் தலைகளால் நடந்து செயற்படுத்துவதில் நீயா நானா என்ற போட்டியில் முன்னின்றவர்கள்.   

இதில் சிங்கள அரச ஏவலாளிகளாக அரசுக்கு தங்களை நிரூபிக்க இவர்கள் கொடுத்த விலை வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்.   

இப்படி போட்டி போட்டு அரச ஏவல் செய்தவர்கள் என்று ஏதோ இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்த தனியார் முதலீடுகளை ஏற்படுத்த என்று கதை அளந்துகொண்டு திரிகிறார்கள்.   

இவர்கள் ஒன்றை மறந்திருக்கலாம் ஆனால் ஈழத்தமிழ் மக்கள் மறக்கப்போவதில்லை.   

லட்சியக்கனவோடு ஆயிரமாயிரம் உயிர்கள் தங்களை தியாகத்துக்கொண்ட மண்ணில் விசம் விதைத்தவர்கள் இவர்கள்.

உலகத்தமிழர் ஒவ்வொருவரும் கனவுகளில் சுமந்திருந்த தேசத்தை அதன்மீதான தாகத்தை தீர்த்துவைக்க பார்த்து பார்த்து நம் தங்கத்தலைவன் உருவாக்கிய கட்டமைப்பை உடைத்தெறிந்துவிட்டு சிங்களத்து எலும்புகளுக்காய் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கியவர்கள்.

ஆயிரமாயிரம் மாவீர தெய்வங்களின் கனவுகளை கலைத்துப்போட்ட இந்த ஜாம்பவான்கள் இன்று ஆடு நனைவதாய் ஓநாய் அழுத கதையாக கதை விடுவதுதான் பெரிய பம்மாத்து.

ஆனால் அந்த முன்னாள் பிரதியமைச்சருக்கு நினைவிருக்கிறதா மட்டக்களப்பு நகரிலிருந்த தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் வியாபாரங்கள் முஸ்லிம்களிடம் சென்று சேர யார் காரணமென்று,

24 மணிநேர கெடு கொடுத்த எஜமானார் என்று இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் மூலம் தமிழர்களின் வாக்குகளுக்கு அலைகிறார். ஆனால் இவர்களுக்கு வாக்களித்து அழகு பார்க்கும் ஈனத்தமிழர்களும் ஈழத்தமிழர்களில் இல்லாமலில்லை.

இன்னொருவர் இன்றைய அமைச்சர் யார் அரசாண்டாலும் அங்கு நான் உங்கள் சேவகன் என்று ஒட்டிக்கொள்வார்.

இவருக்கு நினைவிருக்குமா வடக்கில் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் அதிகரிக்க வெள்ளைவான்கள் செய்த சேவைகளை...

இன்று உங்கள் அக்கறை எங்களின் கனவுகளைச் சிதைத்து சிங்களத்து இனவெறிக்கு வலுவூட்டி எங்கள் கட்டமைப்புகளை உங்களின் துரோகங்களால் வலுவிளக்கச்செய்து உங்களை நம்பி போராட வந்த அப்பாவி இளைஞர்களை பஞ்சமா பாதகர்களாக்கி அழகு பார்த்த நினைவுகளை மறக்கச்செய்யுமா.

துரோகங்களின் கூட்டு இன்னொரு துரோகத்தை உண்டுபண்ணுமே ஒழிய பெட்டைக்கோழி கூவி விடியாது என்பது போல ஒரு நன்மையும் தராது.   

மனங்களை மரங்களாக்கி இனமொன்றை அழித்துவிட்ட ஆனந்த கூத்தில் கூடிக்குலாவும் உங்களை எங்கள் காவல் தெய்வங்களின் புனித ஆன்மாக்கள் எத்தனை நாள் தான் சும்மாவிடும் என்று பார்ப்போமே.

கிழக்கு பிரதியமைச்சர் இப்போது பல்லுப்பிடுங்கிய பாம்புதான் மட்டக்களப்பில், துப்பாக்கியை காட்டி மிரட்டி நடுவீதியில் மிதி வாங்கினாராம். 

அடுத்தவர் நிலை அவருக்கே தெரியும் வடக்கிலொரு அனாதையாக அனாதரவாகத்தான் திரிகிறார்.

எது எப்படியோ கங்கையின் மூழ்கினாலும் காகம் அன்னமாக முடியாது தமிழினத்தின் அவமானச்சின்னங்களாய் நீங்கள் சிரித்து குலாவிக்கொள்ளுங்கள்

ஓம் சாந்தி

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி