தமிழ் தேசியத்தின் உண்மையான துரோகி சாணக்கியன் : அம்பலமாகும் உண்மைகள்
கருணா (Karuna Amman) மற்றும் பிள்ளையானை (Pillayan) தாண்டி சாணக்கியன்தான் தமிழ் தேசியத்தின் உண்மையான துரோகி சாணக்கியன்தான் (Shanakiyan Rasamanickam) என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி (Chidambaram Karunanidhi) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (01) லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்த காலத்தில் சாணக்கியன் தமிழ் மக்களுக்காக ஒரு போதும் குரல் கொடுக்கவில்லை.
அந்த காலப்பகுதியில் மகிந்தவுடனும், மைத்திரிபாலவுடனும் இணைந்து செயல்பட்டவர்தான் சாணக்கியன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் பிரச்சினை, கருணா மற்றும் பிள்ளையான் கூட்டணி, தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளின் நிர்வாகம் மற்றும் தற்போதைய அரசின் அரசியலின் அடுத்த கட்டம் தொடர்பில் அவர் பலதரப்பட்ட விரிவான கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

