இந்து ஆலயத்திற்குள் தமிழருக்கு காத்திருந்த பயங்கரம் :கருணா விசாரிக்கப்படவேண்டும்
செம்மணி புதைகுழி விவகாரம் பூதாகரமாகி யிருக்கும் நிலையில் மட்டக்களப்பு குருக்கள் மடம் என்ற இடத்தில் 72 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை நாடாளுமன்றில் எழுப்பியிருந்தார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்.
கொழும்பில் இருந்து காத்தான்குடி வழியாக வந்து கொண்டிருந்த பெண்கள்,சிறுவர்கள்,ஹஜ் யாத்திரகர்கள் உட்பட 72 முஸ்லிம்களை 1990ஆம்ஆண்டு யூலை மாதம் 11 ஆம் திகதி தமிழ் ஆயுததாரிகள் கொலை செய்து குருக்கள் மடம் கடற்கரையில் புதைத்ததாகவே அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
35 வருடங்களுக்கு மேலாக நடந்த இந்த சம்பவத்தை ஹக்கீம் தற்போது கிளப்பியது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
பல்வேறு தேர்தல் மேடைகள்,மற்றும் தான் நீதியமைச்சராக இருந்தும் வாயே திறக்காத ஹக்கீம், செம்மணி புதைகுழி விவகாரம் தற்போது மேலெழுந்துள்ள நிலையில் எதற்காக இதனை பேச விளைந்துள்ளார் என்ற கேள்வி பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டு வருகிறது
இந்த கொலையின் பின்னணியில் யார், இதற்கான நீதி தற்போது வழங்கப்படுமா என விரிவாக பேசுகிறது இந்த உண்மையின் தரிசனம் ...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

