காஷ்மீரில் பரபரப்பு - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் சுரால்கோட் சித்தார்க் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
நீண்ட நேர துப்பாக்கி சூடு

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் இறந்தனர்.
அவர்களிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள்.
சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.