நீதிமன்றில் மன்னிப்பு கோரிய கஸ்ஸப தேரருக்கு பிணை
Ven. Balangoda Kassapa Thero
By Pavi
நீதிமன்றத்தைப் புறக்கணித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கஸ்ஸப தேரர் நீதிமன்றத்தில் இன்று (11.17.2026) முன்னிலையாகியபோது மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது மன்னிப்புக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், அவரைப் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை
நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |