திருமணமான பெண் பட்டப்பகலில் கடத்தல் - தீவிர தேடுதலில் காவல்துறை
பாடசாலையில் உள்ள தனது மகனை அழைத்துச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதிர்காமம் பகுதியில் நேற்று (24) இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெரியகம பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணொருவரே வானொன்றில் கடத்தப்பட்டவராவார்.
கடத்தியமைக்கான காரணம்
அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண், தனது மகனை அழைத்துச் செல்வதற்காக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது, வேகன் ஆர் வகை வானில் வந்த இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட பெண் குறித்து இதுவரை காவல்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. குறித்த பெண்ணை கடத்தியமைக்கான காரணமோ அல்லது அவரை கடத்திய குழுவினரோ இதுவரையில் தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் மகேஷ் சேனாரத்னவின் மேற்பார்வையில் திஸ்ஸமஹாராம உதவி காவல்துறை அத்தியட்சகர் கயான் பிரசன்ன, கதிர்காமம் காவல் நிலைய பிரதான காவல்துறைபரிசோதகர் பசில் குமார ஆகியோரின் பணிப்புரையின் பேரில் பிரதான காவல்துறை குழுவொன்று இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.