கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: பதில் வழங்கிய இந்தியா

Sri Lanka Airport Sri Lankan Peoples
By Dhilak May 02, 2024 02:16 PM GMT
Report

புதிய இணைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) விசா வழங்குவதை இந்திய நிறுவனங்கள் மேற்கொள்வது தொடர்பான ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர், குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல என்பதால், இந்தியாவைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் தேவையற்றது என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA), இந்திய நிறுவனங்கள் விசா வழங்குவதைப் பற்றி சமூக ஊடகங்கள் உட்பட அறிக்கைகள் மற்றும் கருத்துகளை நாங்கள் பார்த்தோம்.

இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டவை அல்லது இந்திய நிறுவனங்களைச் சார்ந்தவை அல்ல, அவை வேறு இடங்களில் தலைமையிடமாக உள்ளன,” என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கையடக்க தொலைபேசி சந்தையின் தொடர் வளர்ச்சி: ஆய்வில் வெளியான தகவல்

உலகளாவிய கையடக்க தொலைபேசி சந்தையின் தொடர் வளர்ச்சி: ஆய்வில் வெளியான தகவல்


முதலாம் இணைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் செயல்முறைகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது, நேற்று(01) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்போது, விமான நிலையத்தில் (BIA) ஆன்-அரைவல் விசா வழங்கும் செயல்முறையை இந்திய நிறுவனம் ஒன்று சர்ச்சைக்குரிய வகையில் கையகப்படுத்தியுள்ளதாக நபர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்: இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானம்

புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்: இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானம்


கடுமையான எதிர்ப்பு

இந்நிலையில், குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு விசா வழங்கும் நடைமுறை நேற்று முதல் இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: பதில் வழங்கிய இந்தியா | Katunayake Airport On Arrival Visa Issue

இதன் காரணமாக இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் ஆன்-அரைவல் விசா ரத்து செய்யப்பட்டதாகக் கூறி, இந்திய விசா வழங்கும் அதிகாரிகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த நபர், விசா வழங்கும் முறையைக் கையாளக்கூடிய பல இலங்கை நிறுவனங்கள் இருக்கும் போது, இலங்கை அரசாங்கம் ஏன் இந்திய நிறுவனத்திற்கு விசா வழங்கும் முறையை வழங்க வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதேவேளை, விசா வழங்கும் செயல்முறையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக வெளிநாட்டு பயணிகளும் பல மணி நேரங்களுக்கு காத்திருக்க வேண்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பக்கம் திரும்பிய இஸ்ரேலின் பார்வை: ஈரான் அதிபரின் விஜயத்திற்கு எதிர்ப்பு

இலங்கை பக்கம் திரும்பிய இஸ்ரேலின் பார்வை: ஈரான் அதிபரின் விஜயத்திற்கு எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021