நீரில் முழுமையாக மூழ்கிய கட்டுநாயக்க - மினுவாங்கொடை வீதி...!
Bandaranaike International Airport
Sri Lanka
Climate Change
By Shalini Balachandran
கட்டுநாயக்க - மினுவாங்கொடை வீதி நய்கந்த பகுதியில் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.
தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் கடுமையான மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியூடான வாகனப் போக்குவரத்துகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீதியும் தடைப்பட்டுள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள்
எனவே இப்பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தங்களது பயணங்களைத் தடையின்றி மேற்கொள்வதற்கும் தேவையற்ற தாமதங்களைத் தவிர்ப்பதற்கும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி