மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது! கவலையில் கீதா குமாரசிங்க
covid19
vaccine
corona
colombo
keetha kumarasinge
By S P Thas
மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க முடியாதது குறித்து சில நேரம் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சரியான முறையில் தடுப்பூசியை வழங்க முடியாது இருப்பதாகவும் முடிந்தவரை தடுப்பூசியை வரவழைத்து மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள நிலைமை சிறந்ததாக இல்லை. எந்த நாட்டில் இருந்தாவது தடுப்பூசியை வரவழைத்து மக்களுக்கு வழங்க வேண்டும்.
அரசியலுக்கு வந்ததற்கு பதிலாக கலைத்துறையில் இருந்திருக்கலாம். புத்தாண்டு சமயத்தில் மக்கள் விரும்பியவாறு களியாட்டங்களில் ஈடுபட இடமளித்து விட்டு அரசாங்கம் மௌனமாக இருந்தது.
சிலர் கொரோனா இல்லாதது போல் நடந்துக்கொள்கின்றனர் எனவும் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்