கேகாலையிலும் அதிகாலைவேளை வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு
people
kegalle
gas-explosion
feared
By Jaso
நாட்டில் அண்மைய சிலநாட்களாக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம் சமையல் எரிவாயு வெடிப்புக்களாகும்.
நாள்தோறும் எங்காவது ஓரிடத்தில் எரிவாயு வெடிப்புச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கேகாலை − ரொக்ஹில் − கஹடபிட்டிய பகுதியிலும் இன்று (28) அதிகாலை சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது.
வீட்டின் உரிமையாளர் அதிகாலையில் தேநீரை ஊற்றுவதற்காக நீரை அடுப்பில் வைத்த வேளையிலேயே இந்த சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது. சம்பவத்தில் எவருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வருகின்றது.
எரிவாயு கசிவு இந்த வெடிப்புக்கான காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்