கெஹெல்பத்தர பத்மேவிற்கு தொடரும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கெஹெல்பத்தர பத்மேவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து Zoom தொழிநுட்பத்தின் ஊடாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை
இந்தநிலையில், விசாரணைகள் தொடர்வதால் விளக்கமறியலை நீடிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதவான், பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்கு மற்றும் 'கணேமுல்ல சஞ்சீவ' தொடர்பான வழக்கை மாத்திரம் இந்த நீதிமன்றத்தில் தொடருமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேகநபர் மீதான ஏனைய வழக்குகளை உரிய நீதிமன்றங்களுக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |