முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிணை!
புதிய இணைப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ள்ளது.
குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரை பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யபட்டிருந்தார்.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை குறித்த விசாரணைக்காக இன்று (18) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகி உள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விசாரணைக்காக கெஹெலிய ரம்புக்வெல்ல சக்கர நாற்காலியில் வருகை தந்திருந்தமை ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |