மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல
Keheliya Rambukwella
Sri Lanka Magistrate Court
By Jaso
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு இன்று(22) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் விளக்கமறியல்
தரமற்ற ஊசி மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கடந்த பெப்ரவரி 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேகநபர் மறுநாள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதன்படி, தற்போது வரை முன்னாள் சுகாதார அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 18 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி