கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு தரமற்ற மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டில், வாக்குமூலம் வழங்க அவர் இன்று திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, வாக்குமூலம் வழங்க கெஹலிய ரம்புக்வெல்லவை இன்று காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
குற்றச்சாட்டு
தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காக கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை.
இந்த நிலையில், கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று (2) காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்டது.
கைது நடவடிக்கை
குற்றப்புலனாய்வுப் பிரிவில் நீண்ட நேரம் வாக்கு மூலம் வழங்கியதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்