கெஹலிய ரம்புக்வெலவிற்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு
Colombo
Keheliya Rambukwella
Sri Lanka Magistrate Court
By Sumithiran
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த (anaka Chandragupta)மற்றும் சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க(Saman Ratnayake) ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தரமற்ற ஊசி மருந்து கொள்வனவு
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணைகளின் போது மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இன்று (08) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்