சடுதியாக அதிகரித்து வரும் களனி ஆற்றின் நீர்மட்டம்!
புதிய இணைப்பு
களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது.
சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் 7.4 அடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, சில இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே அறிவித்துள்ளார்.
இதன்படி, பின்வரும் பகுதிகளில் உள்ள தாழ்வான நிலங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
கடுவெல - மாலபே வீதி, அத்துருகிரிய - மாலபே வீதி, மாலபே முதல் பத்தரமுல்லை வரையிலான வீதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மாலபே ஆண்கள் கல்லூரிக்கு அல்லது பிட்டுகல யசோதரா மகா வித்தியாலயத்திற்குச் செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
ஹன்வெல்ல களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது 10.01 மீற்றர் ஆக தற்போதய நிலவரப்படி உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஹன்வெல்ல களனி ஆற்றின் அளவீட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இது நதியை பெரிய வெள்ள மட்டப் பகுதியில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல்நிலை நீரோட்டம்
முந்தைய வெள்ள நிகழ்வுகளில், கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேல்நிலை நீர் வருவதற்கு முன்பு குறிப்பிடத்தக்க மழை பெய்யவில்லை.

இருப்பினும், இந்த முறை கொழும்புக்கு அருகிலுள்ள பல பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் மேல்நிலை நீரோட்டம் வரும் நீரோட்டம் நிலைமையை மிகவும் மோசமாக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
