பெரும் சோகத்தில் முடிந்த யாழ்ப்பாண பயணம்: அடுத்தடுத்து மூவர் பலி!
அண்மையில் விபத்தில் உயிரிழந்த களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் என்.டி.ஜி. கயந்தவின் மனைவியும் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த விரிவுரையாளரின் மனைவி கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (26) உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று உயிரிழந்த 42 வயதான குறித்த பெண்ணும் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து சம்பவம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் தம்பதியினர் தங்கள் மூன்று குழந்தைகளுடன் மார்ச் 19 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள நாகதீபத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.
இந்த விபத்தில், களனி பல்கலைக்கழக விரிவுரையாளர் என்.டி.ஜி. கயந்த உயிரிழந்ததுடன், அவரது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் மற்றும் மைத்துனர் அனைவரும் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சிகிச்சைக்குப் பிறகு மாமியார் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையை விட்டு வெளியேறியதுடன், முதல் நாள் விரிவுரையாளர் கயந்தவின் மைத்துனரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
