கேரளா சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் : முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!
புதிய இணைப்பு
கேரளா சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் மாலை 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 61 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் 39 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன் இடது முன்னணி காங்கிரஸ் 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதுடன் 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
கேரளா சட்ட மன்றத் தேர்தலின் 140 தொகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்தநிலையில் காலை 11.00 நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 85 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், ஆளும் இடது முன்னணி 42 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடது முன்னணி கூட்டணி ஆட்சியை இழக்கும் என எதிர்பார்ப்பதுடன் கேரளாவில் காங்கிரஸின் ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்
அத்துடன் காலை 11 மணி நிலவரப்படி, தர்மாடம் (Dharmadam) தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் 26,779 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத் அவரை விட 1090 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 12 மணி நேரம் முன்