அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய்யின் விலை..! அரசாங்கம் எடுத்த மாற்று நடவடிக்கை
மண்ணெண்ணெய்யை விலை அதிகரிப்பால் பாதிக்கப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அதற்கு இணையாக நேரடி நிதி நிவாரணத்தை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
மண்ணெண்ணெய் விலைத் திருத்தத்துக்கான அவசியம் பல ஆண்டுகளாக நிலவி வந்ததாகவும், மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட்டமை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டமடைவதற்குரிய ஒரு காரணி எனவும் அமைச்சர் குறித்த பதிவில் குறிப்பிட்டார்.
Kerosene price revision was a must for many years. One main reason for CPC losses was selling at subsidized prices. With prices now on par with costs the Govt has proposed a direct cash subsidy to low income families, fisheries & plantation sectors that depend on kerosene.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 22, 2022
வரலாறு காணாத விலை அதிகரிப்பு

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 253 ரூபாவினால் அதிகரித்தது.
இதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 87 ரூபாவில் இருந்து 340 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மண்ணெண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகூடிய அதிகரிப்பாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.