ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடந்தது என்ன! மீண்டும் வெளிவந்த மௌலானாவின் வாக்குமூலம்
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பு நாட்டின் ஜனாதிபதியே என்பதை வலியுறுத்திய முன்னைய அரசாங்கங்களும், தற்போதைய அரசாங்கமும் ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியை மறைத்து வருகிறதா என்ற கேள்வி வெளிவர ஆரம்பித்துள்ளது.
2019 ஏப்ரல் 21 அன்று நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவ பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைப்பாடு இன்றளவும் காணப்படுகிறது.
எனினும் சிறிசேன அம்பலப்படுத்திய தற்போதைய விவகாரம் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் என அடையாம் காணப்பட்ட பிள்ளையான், சஹ்ரான் மற்றும் சுரேஸ் சாலேவை கடந்த முக்கிய சூத்திரதாரி உள்ளார் என்பதை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று மைத்ரிபால சிறிசேன கூறினார்.
அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்தவர் என்றும், ஆனால் அவரை அடைய முடியாது என்றும் அவர் கூறினார். அது எப்படி நடந்தது என்பது பற்றி நான் சிஐடியிடம் எல்லாவற்றையும் சொல்லியதாகவும், ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளியிட முடியாது எனவும் கூறியுள்ளார்.
அவ்வாாறென்றால் மைத்திரியின் கருத்தில் மறைந்திருக்கும் அந்த மர்மத்தை ஏன் இலங்கை மூடி பாதுகாக்கின்றது?
கடுமையான குற்றங்கள் நடந்துள்ள இந்த பின்னணியின் முடிச்சு உடைக்கப்பட கூடாது என வேண்டுமென்றே திட்டமிடப்பட்டமிடப்படுகிறதா.
இவ்வாறான பின்னணிகளை அளசி ஆராய்கிறது இன்றை ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
